என் மலர்
அரியலூர்
அரியலூர் அருகே பணியிடை நீக்கம் செய்த காரணத்தால் ரேஷன் கடை பெண் ஊழியர் மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வாணதிராயன்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜராஜசோழன். இவரது மனைவி நிவேதா (வயது 26). இவர் கழுவன் தோண்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பறக்கும் படை அதிகாரிகள் ரேஷன் கடையில் ஆய்வு செய்தபோது, சரக்கு குறைவாக இருந்துள்ளது. இதனால் கூட்டுறவு சங்கங்களின் அரியலூர் மண்டல இணைப்பதிவாளர் தயாளன், நிவேதாவை பணியிடை நீக்கம் செய்தார். இதனால் அவர் வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிவேதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பணியிடைநீக்கம் செய்யப்பட்டதன் காரணமாக மனமுடைந்து நிவேதா தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறைகளை மீறிய 882 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்பட வாகன விதிமுறைகளை மீறியதாக 882 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை போலீசார் அபராதமாக வசூலித்தனர். தொடர்ந்து இனி வரும் காலங்களில் இதே போன்று வாகன விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மர்ம காய்ச்சலுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பலியானார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 60). இவர் அரியலூர் அருகே உள்ள காரைகுறிச்சி பஞ்சாயத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார்.
இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் வந்தது. உடனே அவரை சிகிச்சைக்காக ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணம் ஆகவில்லை. உடனே மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிகளில் கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார்.
செந்துறை:
செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆனந்தவாடி, கீழமாளிகை, இரும்புலிக் குறிச்சியில் உள்ள அரசு பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார். அப்போது ஆனந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை பதிவேடு, அறிவியல் ஆய்வகம், கழிப்பறை, மாணவர்களுக்கு வழங்கும் உணவை சோதனை செய்தார்.
மேலும் ஆனந்தவாடி அங்கன் வாடி மையத்தில் குழந்தை களுக்கு வழங்கப்படும் சத்து உருண்டை மாவு, உணவின் தரம்,குழந்தைகளுக்கு அளிக்கப் படும் பயிற்சியை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து இரும்புலிக் குறிச்சி ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் அனைத்து மருத்துவ வசதிகள், கர்ப்பிணிகளுக்கு அளிக்கப் படும் சிகிச்சை குறித்து கலெக்டர் லட்சுமி பிரியா ஆய்வு செய்தார்.
பின்னர் கீழமாளிகை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் 201617ன்கீழ் ரூ.8 லட்சத்தில் ராஜமூர்த்தி என்பவர் கிணறு அமைக்கும் பணி, வீரக்கான் ஊராட்சியில் ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டிட கட்டுமான பணியை ஆய்வு செய்தார். செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன் மற்றும் மருத்துவர், செவிலியர்கள் உடனிருந்தனர்.

திருமானூர் அருகே உடல்நலம் சரியில்லாமல் வருபவர்களுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருமானூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே மேலப்பழுவூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). இவர் பி.எஸ்.சி. கம்பியூட்டர் சயின்ஸ் படித்து விட்டு மேலப்பழுவூரில் 13 ஆண்டுகளாக இன்னொருவர் பெயரில் மருந்தகம் (மெடிக்கல்) வைத்து நடத்தி வருகிறார்.
மேலும், உடல்நலம் சரியில்லாமல் வருபவர்களுக்கு அவ்வபோது ஊசி போட்டும், மருந்து, மாத்திரைகள் கொடுத்து வந்துள்ளார். இதில், சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகார்கள் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் செல்வராஜனுக்கு வந்துள்ளது.
இது குறித்து அவர் நேற்று கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் போலி டாக்டர் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பிழைகள் நீக்கம், பெயர் மற்றும் முகவரி திருத்தம் முகாம் வருகிற 30-ந்தேதி வரை நடக்கிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான லட்சுமி பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் நடந்தன. அதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் முழுமையாக சேர்த்தல், பிழைகள் நீக்கம், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யும் பொருட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று சரிபார்ப்பு பணி மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன் பேரில் அரியலூர் மாவட்டத்தில் வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த சிறப்பு முகாமின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் 1.1.2019 அன்று வாக்காளராக பெயர் சேர்க்கப்பட தகுதி பெறும் (பிறந்த தேதி 2.1.2000 முதல் 1.1.2001 வரை) இளம் வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியும் முகாமின் போது மேற்கொள்ளப்படும்.
மேலும் இறந்த வாக்காளர்கள் நீக்கம், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம். www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை பயன்
படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பிழைகள் நீக்கம், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யும் முகாம் வருகிற 30-ந்தேதி வரை நடக்கிறது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான லட்சுமி பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதியை தகுதி நாளாக கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் நடந்தன. அதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் முழுமையாக சேர்த்தல், பிழைகள் நீக்கம், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யும் பொருட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று சரிபார்ப்பு பணி மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன் பேரில் அரியலூர் மாவட்டத்தில் வருகிற 30-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த சிறப்பு முகாமின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் 1.1.2019 அன்று வாக்காளராக பெயர் சேர்க்கப்பட தகுதி பெறும் (பிறந்த தேதி 2.1.2000 முதல் 1.1.2001 வரை) இளம் வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியும் முகாமின் போது மேற்கொள்ளப்படும்.
மேலும் இறந்த வாக்காளர்கள் நீக்கம், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் மற்றும் நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம். www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனையும் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும் என அரியலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமிபிரியா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் குழந்தைகள் தின வார விழாவினை முன்னிட்டு சைல்டு லைன் 1098 வாயிலாக நவம்பர் 13-ந் தேதி முதல் 19 வரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. நவம்பர் 14, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கான உரிமைகளான வாழும் உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்பு பெறும் உரிமை மற்றும் பங்கேற்கும் உரிமை ஆகியவற்றை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான பிரச்சனைகளான குழந்தை திருமணம், குழந்தை கடத்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாதவாறு இருத்தல் வேண்டும்.
ஆணுக்கு 21 வயது மற்றும் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி ஆகாதவர்களுக்கு திருமணம் செய்தால், குழந்தை திருமணமாக கருதப்படும். அவ்வாறு குழந்தை திருமணம் செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும். மேலும், குற்றமிழைத்த நபர்களின் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி வழக்கு பதிந்து 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனைகள் வழங்கவும் வழிவகை உள்ளது.
எனவே, அரியலூர் மாவட்டத்தை குழந்தை திருமணம் இல்லா மாவட்டமாக உருவாக அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அனுப்பாதீர்கள், அவர்களை கல்வி கற்க அனுப்ப வேண்டும். கல்வி பெறுவது குழந்தைகளின் உரிமையாகும். எனவே, குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது தண்டனைக்குரிய குற்றம். அக்குற்றத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறை தண்டனையும் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும். குழந்தைகளுக்கு பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பற்ற தொடுதல் பற்றி பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டுமெனவும், அவ்வாறு பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படும் எனவும், குழந்தைகளுக்கான பிரச்சனை இருந்தால் 24 மணி நேரமும் குழந்தைகள் உதவி மையம் 1098 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் 97 பயனாளிகளுக்கு ரூ.48 1/2 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தலைமை தாங்கினார். அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனராஜன் வரவேற்று பேசினார். முகாமில், 9 நபர்களுக்கு நத்தம் வீட்டுமனை பட்டாக்களும், வேளாண்மைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் உள்பட மொத்தம் 97 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சத்து 45 ஆயிரத்து 100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-
பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் வராமல் பாதுகாத்துக்கொள்ள டெங்கு கொசு ஒழிப்பு பணியில் விழிப்புடன் இருக்க வேண்டும். தங்களது வீடுகள், சுற்றுப்புறங்கள், கழிவுநீர் வாய்க்கால்கள், குடிநீர் தொட்டிகள் போன்றவற்றில் தூய்மையை பராமரிக்க வேண்டும்.
கீழகாவட்டாங்குறிச்சி ஊராட்சியில் தனிநபர் இல்ல கழிப்பறை குறைவாக உள்ளதால், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தார் இப்பகுதியில் கூடுதலாக தனிநபர் இல்ல கழிப்பறைகளை கட்டி, அரசு மானிய நிதியுதவியினை பெற்று தனிநபர் இல்ல கழிப்பறை பயன்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

செந்துறையில் என்.சி.சி. மாணவர்கள் சார்பாக டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
செந்துறை:
செந்துறையில் என்.சி.சி. மாணவர்கள் சார்பாக டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
டெங்கு பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார். பேரணியில் நாட்டு நலப்பணி திட்ட மாண வர்கள்,தேசிய பசுமை படை மாணவர்கள், ஆகியோர் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் ஒழிப்போம் டெங்குவேவை ஒழிப்போம் என்று கோஷ்ங்கள் எழுப்பி ஊரில் உள்ள முக்கிய விதிகளை வழியாக வந்தனர்.
இதில் தேசிய மாணவர் படை அலுவலர் பழனிவேல், என்.எஸ்.எஸ்.அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் சுலைமான் உதவி தலைமை ஆசிரியர்கள் பழனி வேல்,தேவேந்திரன், உடற்கல்வி ஆசிரியர் பிரேம்குமார், மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டார்கள்.

மீன்சுருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியை அடுத்துள்ள பிச்சனூர் நடுத்தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 43). இவரது தாய் சேதுமணி (60) மற்றும் மனோகரன் மகன் சத்தியபிரியன் (2) ஆகியோர் மோட்டார் சைக்கிளில் குழவடையான் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
காட்டுக்கொல்லை அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மனோகரன், சேதுமணி, சத்தியபிரியன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திவாகர் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் நாகை மாவட்டம், குத்தலாம் கூடலூர் மேலத்தெருவை சேர்ந்த மச்சேந்திரர் (29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம் பகுதியில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய 246 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.40 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் விபத்துக்கள் நடந்து வருகிறது. இதனை குறைக்கும் விதமாக ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, வாகனத்தை வேகமாக ஓட்டுவது, அதிகபாரம் ஏற்றுவது, போதையில் வாகனத்தை இயக்குவது, சீட் பெல்ட் அணியாமல் செல்வது மற்றும் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வது மற்றும் உயரமாக பாரம் செல்வது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, சீருடை அணியாமல் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவது, 3பேர் செல்வது, வாகன காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டியது என்பது உள்ளிட்ட பலவகையான சாலை விதிகளை மீறிய 246 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.40 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.