என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி
    X

    செந்துறையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி

    செந்துறையில் என்.சி.சி. மாணவர்கள் சார்பாக டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    செந்துறை:

    செந்துறையில் என்.சி.சி. மாணவர்கள் சார்பாக டெங்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    டெங்கு பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தொடங்கி வைத்தார். பேரணியில்  நாட்டு நலப்பணி திட்ட மாண வர்கள்,தேசிய பசுமை படை மாணவர்கள், ஆகியோர் கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் ஒழிப்போம் டெங்குவேவை ஒழிப்போம் என்று கோஷ்ங்கள் எழுப்பி ஊரில் உள்ள முக்கிய விதிகளை வழியாக வந்தனர்.

    இதில் தேசிய மாணவர் படை அலுவலர் பழனிவேல், என்.எஸ்.எஸ்.அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, நாட்டு நலப்பணிதிட்ட அலுவலர் சுலைமான் உதவி தலைமை ஆசிரியர்கள் பழனி வேல்,தேவேந்திரன், உடற்கல்வி ஆசிரியர் பிரேம்குமார், மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு டெங்கு விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டார்கள்.
    Next Story
    ×