search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஜெயங்கொண்டம் பகுதியில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய 246 பேர் மீது வழக்கு
    X

    ஜெயங்கொண்டம் பகுதியில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய 246 பேர் மீது வழக்கு

    ஜெயங்கொண்டம் பகுதியில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய 246 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.40 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டத்தில் அதிக அளவில் விபத்துக்கள் நடந்து வருகிறது. இதனை குறைக்கும் விதமாக ஜெயங்கொண்டம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, வாகனத்தை வேகமாக ஓட்டுவது, அதிகபாரம் ஏற்றுவது, போதையில் வாகனத்தை இயக்குவது, சீட் பெல்ட் அணியாமல் செல்வது மற்றும் சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி செல்வது மற்றும் உயரமாக பாரம் செல்வது. ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, சீருடை அணியாமல் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவது, 3பேர் செல்வது, வாகன காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டியது என்பது உள்ளிட்ட பலவகையான சாலை விதிகளை மீறிய 246 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூ.40 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×