என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோவையில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது
  X

  கோவையில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 1304 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
  • வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர்.

  கோவை,

  கோவை ரத்தினபுரி டாடாபாத் 9-வது வீதியில் உள்ள பள்ளி அருகே சிலர் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்வதாக ரத்தினபுரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர்.

  அப்போது அங்கிருந்த சில வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர்.

  அவர்களை மடக்கி பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பீளமேடு காளப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு மருந்து கடையில் போதை மாத்திரைகளை வாங்கி அதனை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்தி போதைக்கு பயன்படுத்தி வந்ததும், இங்கு போதை மாத்திரை விற்பதற்காக நின்றதும் தெரியவந்தது.

  இதனையடுத்து போலீசார் கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விவேக் பாரதி (வயது 18) மற்றும் 16 வயது சிறுவன், தேனி மாவட்டத்தை சேர்ந்த கோவையில் தங்கி கல்லூரியில் படிக்கும் தனபாலன் (19), மருந்து கடையில் போதை மாத்திரைகளை பதுக்கி கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்த மருந்து கடை உரிமையாளர் கரிகாலன் (49) ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1304 போதை மாத்திரைகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

  Next Story
  ×