search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை ஏ.ஆர். லைனில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத
    X
    பாளை ஏ.ஆர். லைனில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத

    ஊட்டச்சத்தினை உறுதி செய் திட்டத்தில் நெல்லையில் 20,947 குழந்தைகளை பரிசோதனை செய்ய திட்டம்-கலெக்டர் விஷ்ணு தகவல்

    ஊட்டச்சத்தினை உறுதி செய் திட்டத்தில் நெல்லையில் 20,947 குழந்தைகளை பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
    நெல்லை:

    தமிழக அரசு சார்பில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ‘ஊட்டச்சத்தினை உறுதிசெய்' என்ற திட்டத்தின் கீழ் குழந்தைகள் வளர்ச்சி நிலையை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாமை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் 4 வாரங்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அங்கன்வாடியில் ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற திட்டத்தை மாவட்ட கலெக்டர் விஷ்ணு இன்று தொடங்கி வைத்தார்.

    அப்போது கலெக்டர் விஷ்ணு கூறியதாவது:-
    இந்த திட்டத்தின் மூலமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள 1261 குழந்தைகள் மையத்தில் 400 சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதில் சுமார் 20 ஆயிரத்து 947 குழந்தைகளை பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த முகாம் மூலமாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து 6 வயதுக்கு உட்பட்ட கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் பின்னர் மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளை பிரித்து எடுத்து அவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படும் குழந்தைகளின் விவரங்கள் அதற்கென வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் கிருஷ்ண லீலா, மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×