search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருவைகுளத்தை சுற்றுலா தலமாக மாற்றும் வரைபடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  ஆய்வு செய்த காட்சி.
    X
    தருவைகுளத்தை சுற்றுலா தலமாக மாற்றும் வரைபடத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்த காட்சி.

    உடன்குடி அருகே தருவைகுளத்தில் படகு சவாரி அமைத்து சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தகவல்

    உடன்குடி அருகே தருவைகுளத்தில் படகு சவாரி அமைத்து சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.
    உடன்குடி:

    உடன்குடி, குலசேகரன் பட்டினம் ஊர்களுக்கு நடுவே நீர் பிடிப்பு குளமான தருவை குளம் உள்ளது. இந்த குளத்தை தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தமிழக மீன்வளத் துறை தலைமை பொறியாளர் ராஜ், செயற்பொறியாளர் சரவணகுமார், உதவி செயற்பொறியாளர் ரவி, உதவி பொறியாளர் தயாநிதி ஆகியோர் பார்வையிட்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், உடன்குடி யூனியன் தலைவர்  பாலசிங், துணைத் தலைவர் மால் ராஜேஷ், செட்டியா பத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், தூத்துக்குடி ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், குலசேகரன்பட்டினம் ஊராட்சிதுணை தலைவர் கணேசன், தண்டுபத்து திலகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
    பிரசித்திப்பெற்ற முத்தாரம்மன் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.  மேலும் உடன்குடி அனல்மின் திட்டம், ராக்கெட் ஏவுதளம் போன்ற பெரிய திட்டங்கள் வரவுள்ளது.

     எனவே பக்தர்கள் பொது மக்களை கவரும் வகையில் குலசை தருவை குளத்தை ஆழப்படுத்தி ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

    குழந்தைகள் படகு சவாரி மற்றும் நீர் சம்பந்தமான விளையாட்டு, பெரியவர்கள் வாக்கிங் செல்ல வசதி மற்றும் ஓட்டல்கள் அமைக்கப்படுகிறது. நவீன மின் விளக்கு வசதிகள் செய்யப்படுகிறது.

    உடன்குடியில் இருந்து குலசை வரை பக்தர்கள் இரவில் நடந்து செல்ல வசதியாக கூடுதல் மின் விளக்கு வசதியும், தருவை குளத்திற்கு தண்ணீர் வரும் கால்வாய்எல்லப்ப நாயக்கன்குளத்தில் இருந்து விரிவுபடுத்தப்படும்.

    தருவை குளம் நிறைந்தவுடன் மழை நீர் வீணாக மணப்பாடு கடலுக்கு செல்கிறது. இந்த மழை நீரை நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையில் ஆதியாக்குறிச்சி ஊராட்சி பகுதியில் புதிய நீர் பிடிப்புகுளம் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சருடன் தி.மு.க. சார்பு அணி நிர்வாகிகள் பரமன்குறிச்சி இளங்கோ, ரவிராஜா, மகாவிஷ்ணு மணப்பாடு ஜெயபிரகாஷ். பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் சலீம் மற்றும் உடன்குடி குலசை மணப்பாடு பகுதி தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×