என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கல்குவாரி விபத்தில் சிக்கிய ஆயன்குளத்தை சேர்ந்த முருகன் சடலமாக மீட்கப்பட்ட காட்சி.
  X
  கல்குவாரி விபத்தில் சிக்கிய ஆயன்குளத்தை சேர்ந்த முருகன் சடலமாக மீட்கப்பட்ட காட்சி.

  விபத்து நடந்த கல்குவாரி முழுவதும் பேரிகார்டுகளால் அடைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னீர்பள்ளம் அருகே உள்ள அடைமிதிப்பான் குளத்தில் விபத்து நடந்த கல்குவாரி முழுவதும் பேரிகார்டுகளால் அடைக்கப்பட்டுள்ளது.
  நெல்லை:

  முன்னீர்பள்ளம் குவாரி விபத்தில் 2 பேர் பலியான நிலையில் மேலும் 2 பேரை மீட்கும் நடவடிக்கைகள் நடந்து வருகிறது. குவாரியில் 3-வது நாளாக இன்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில் குவாரி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது.  குவாரியை சுற்றி பேரிகார்டுகள் வைத்து அடைக்கப்பட்டு உள்ளது. வெளி ஆட்கள் யாரும் குவாரிக்குள் செல்ல முடியாதபடி தடுக்கப்பட்டு உள்ளது.
  விபத்து நடந்த இடத்தையொட்டி உள்ள பாறைகளில் இருந்து தண்ணீர் கசியும் காட்சி.
  இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், மீட்பு பணிகளை பார்ப்பதற்காகவே கூட்டம் அதிகமாக வருகிறது. இது ஒருபுறம் இருக்க விபத்து நடந்த இடத்தை சுற்றி உள்ள பாறைகளும் தொடர்ந்து சரிந்து விழுகிறது.

  எனவே தான் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் குவாரியை சுற்றி பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளது என்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
  Next Story
  ×