என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  மேட்டூர், காடையாம்பட்டியில் மழை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேட்டூர், காடையாம்பட்டியில் மழை பெய்தது.
  சேலம்:

  சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின்  சில பகுதிகளில் மழை பெய்தது.

   குறிப்பாக மேட்டூர், காடையாம்பட்டி, ஏற்காடு  பகுதிகளில்   சாரல் மழை பெய்தது.  மழையை தொடர்ந்து  அந்த பகுதி–களில் குளிர்ந்த காற்று வீசியது. கோடை காலத்தில்  பெய்து வரும் இந்த மழை பயிருக்கு உகந்ததாக இருக்கும்  என்பதால் விவசாயிகள் மகிழ்சசி அடைந்துள்ளனர். 

  ஏற்காட்டில் நேற்றும் சாரல் மழை  பெய்தது . இதனால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அறைகளிலேயே முடங்கினர்.  இன்று காலை லோசன வெயில் அடித்த படி இருந்தது. 

  மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 6.2 மி.மீ.  மழை பெய்துள்ளது. காடையாம்பட்டி 3, ஏற்காடு 2, ஆனைமடுவு  2 மி.மீ  என மாவட்டம் முழுவதும் 13.2 மி.மீ. மைழை பெய்துள்ளது.
  Next Story
  ×