என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  கடையநல்லூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்-அமைச்சரிடம் மனு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடையநல்லூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என கோரி அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் மனு கொடுக்கப்பட்டது.
  கடையநல்லூர்:

  தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செய லாளர் செல்லத்துரை தலைமையில் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் சென்னையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப் பதாவது:-

  கடையநல்லூர் அரசு மருத்துவமனையை சீமாங் (மகப்பேறு மற்றும் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவமனையாக) தரம் உயர்த்த வேண்டும்.

  தீவிர சிகிச்சை பிரிவு 4 படுக்கைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க தேவையான மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

  ரத்த சுத்திகரிப்பு பிரிவில் தினமும் 7 முதல் 8 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், அவசர சிகிச்சை பிரிவில் சுழற்சி முறையில் பணி செய்ய எலும்பு முறிவு, பாம்புக்கடி, விஷம் குடித்தவர் சிகிச்சை செய்யவும் போதுமான எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்களை நியமனம் செய்ய வேண்டும். பொது அறுவை சிகிச்சை செய்யவும் சுழற்சிமுறையில் பணியாற்றவும் அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமனம் செய்ய வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட ஆய்வகம் அமைக்க தனி கட்டிடம் மற்றும் ஆய்வு நுட்புனர், தேவையான உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறியி ருந்தனர்.
  Next Story
  ×