என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  X
  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  கூலிப்படை முற்றிலும் ஒழிக்கப்படும்- சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எந்த திசையில் இருந்து அழுத்தம் வந்தாலும், சிபாரிசு வந்தாலும் சட்டத்தின் பக்கமே நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
  சென்னை:

  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசியதாவது:-

  கொலை, திருட்டு, பாலியல் தொந்தரவு, போதை மருந்துகள் வன்முறைச் சம்பவங்கள் ஆகியவைதான் மிகப்பெரிய குற்றங்கள். இவை எந்தச் சூழலிலும் நடைபெறாத நிலையை உருவாக்குவதற்கு காவல் துறை திட்டமிட வேண்டும். எந்தச் சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரும் சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாகவோ, மதம் மற்றும் சாதி காரணமாகவோ வன்முறைகள் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி திட்டமிட்டு இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் மோதல்கள் உருவாக்க நினைப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்.

  அதேநேரத்தில், காவல்துறையும் யாராலும் கை நீட்டிக் குற்றம் சொல்ல முடியாத துறையாக இருக்க வேண்டும். எங்கோ ஒரு காவலர் செய்யக்கூடிய தவறு இந்த ஆட்சியின் தவறாக குற்றம் சாட்டப்படும். அவர்மீது நாம் நடவடிக்கை எடுத்தாலும், ஆட்சியின் மீதான கறையாக அந்தச் சம்பவம் பேசப்படும். எனவே, காவல்துறையைச் சேர்ந்த ஒவ்வொருவரும் விமர்சனத்துக்கு இடமில்லாமல் தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும்.

  ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று பாராமல் சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட வேண்டும். எந்த திசையில் இருந்து அழுத்தம் வந்தாலும், சிபாரிசு வந்தாலும் நீங்கள் சட்டத்தின் பக்கமே நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில், அதிகாரிகளும் தவறு செய்துவிடக்கூடாது. தவறு செய்யும் அதிகாரிகளுக்கு இந்த அரசில் இடமில்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

  போதைப் பொருட்களுக்கு நமது மாணவச் செல்வங்கள் அடிமையாவது மிக மிக கவலையளிக்கிறது. ஆகவே குட்கா விற்பனையைத் தடுத்து நிறுத்துங்கள்; போதைப் பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள். போதையில் இருந்து இளைய சமுதாயத்தைக் காப்பது இன்றைய சூழலில் மிக முக்கியமானதாக நினைக்கிறேன். எந்த போதை மருந்து நடமாட்டமும் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது.

  கூலிப்படை வைத்துக் கொலை செய்த வழக்குகளை, விசாரணையை விரைந்து முடித்து, கூலிப்படைகளுக்கே முற்றுப்புள்ளி வையுங்கள். கூலிப்படை வைத்திருப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் முழுமையாகத் துடைத்தெறியப்பட வேண்டும்.

  இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
  Next Story
  ×