search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் தங்கம் தென்னரசு
    X
    அமைச்சர் தங்கம் தென்னரசு

    மதுரைக்கு செல்லூர் ராஜூதான் சிறந்த பொழுதுபோக்கு- அமைச்சர் பேச்சால் சிரிப்பலை

    மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜூ என்பது நாட்டுக்கே தெரிந்த ஒன்று என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தது சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    சென்னை:

    மதுரைக்கே பொழுது போக்கு நீங்கள் தான் என்று முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செல்லூர் ராஜூவை நகைச்சுவையாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தது பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

    சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, மதுரையின் மெரினாவாக மாரியம்மன் கோயில் தெப்பகுளம் இருப்பதாகவும், இங்கு லேசர் ஷோ நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என்றும் அமைச்சர் இளைஞராக இருப்பதாக கூறி இந்த கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும் என்றும் தெரிவித்தார்.

    அப்போது பதிலளித்த சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன், அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, மதுரையில் 20 லட்சம் பேர் இருப்பதாவும், பொழுது போக்குவதற்கு எந்த அம்சமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

    அப்போது குறுக்கிட்டு பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜூ என்பது நாட்டுக்கே தெரிந்த ஒன்று என்று தெரிவித்ததால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

    Next Story
    ×