என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  .
  X
  .

  ஜேடர்பாளையம் வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜேடர்பாளையம் வழித்தடத்தில் அரசு பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை.
  பரமத்திவேலூர்: 

  பரமத்திவேலூர் பஸ் நிலையத்திலிருந்து காலையில் 8.15 மணிக்கு அரசு டவுன் பஸ் பாண்டமங்கலம் வழியாக ஜேடர் பாளையத்திற்கு இயக்கப்பட்டது. 

  இதற்கு பிறகு சுமார் 2 மணி நேர இடைவெளியில் 10.15 மணிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ்சை பரமத்திவேலூரில் இருந்து பாண்டமங்கலம் மற்றும் ஜேடர்பாளையம் அரசு பள்ளிகளில்  பயிலுகின்ற மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு  பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

  அதுபோல் தனியார் பஸ்களும் பரமத்திவேலூர் இருந்து ஜேடர்பாளையம் வழித்தடத்தில்  முறையாக இயக்கப்படுவது இல்லை.  இதுகுறித்து தனியார் பஸ் நிர்வாகத்திடம் கேட்டபோது போதிய வசூல் இல்லாததால் பஸ்சை நிறுத்தி விட்டதாக  தெரிவிக்கிறார்கள்.

  அரசியல் காரணங்களுக்காக இப்பகுதியில் அரசு பஸ் நிறுத்தப்பட்டதாக பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.  காலை 9 மணி அளவில் அரசு பஸ்சை இயக்கினால் பள்ளி மாணவர்களுக்கும், வேலைக்கு  செல்பவர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் பயணிகளின் நலன் கருதி காலை 9 மணிக்கு பரமத்திவேலூர் பஸ் நிலையத்திலிருந்து ஜேடர்பாளையம் வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என பள்ளி, கல்லூரி மாணவ& மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Next Story
  ×