என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  உயர்நீதிமன்றம், சசிகலா
  X
  உயர்நீதிமன்றம், சசிகலா

  நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு- சசிகலா பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிமுக நிர்வாகிகள் தம்மை சந்தித்து வருவதாகவும், தொண்டர்களை தொடர்ந்து சந்திப்பேன் என்றும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
  சென்னை:

  அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி  கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

  இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், சசிகலா வழக்கு தொடர்ந்தார். 

  இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஸ்ரீதேவி, சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது செல்லும் என்றும், இந்த வழக்கை நிராகரிக்க கோரி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் அறிவித்தார்.

  இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா,  , அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லும் என்ற நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன் என்று தெரிவித்தார்.

  அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும் என்று தொண்டர்கள் கருதுவதாகவும், அதிமுக நிர்வாகிகள் தம்மை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொண்டர்களை தாம் தொடர்ந்து சந்திப்பேன் என்றும் சசிகலா கூறியுள்ளார்.


  Next Story
  ×