என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பால் குடம் எடுத்து வந்த பக்தர்கள்.
  X
  பால் குடம் எடுத்து வந்த பக்தர்கள்.

  மகா மாரியம்மன் கோவிலில் பாலாபிஷேக விழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவிலில் பாலாபிஷேக விழா நடைபெறுவது.
  பரமத்திவேலூர்:

  பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பாலாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு மகா மாரியம்மன் கோவிலில் பாலாபிஷேக விழா நேற்று நடந்தது. 

  இதையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்கள் மற்றும் பால் குடங்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். 

  பின்னர் மகா மாரியம்மனுக்கு பால் மற்றும் புனித தீர்த்தங்களால் அபிஷேகமும், ஆராதனைகளும் நடந்தது. தொடர்ந்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

  அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மகா மாரியம்மன் கோவில் பால்குட அபிஷேக விழா குழுவினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
  Next Story
  ×