என் மலர்

  நீங்கள் தேடியது "Maha"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தில் திருக்கார்த்திகை தீப விழா அறக்கட்டளை சார்பில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
  • இந்த தீபம் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பிரகாசமாக தெரிந்தது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தீப விழா குழுவினர் மலைக்குச் சென்று திரிகளை மாற்றி தீபம் ஏற்றி வைத்தனர்.

  திருச்செங்கோடு:

  கொங்கு 7 சிவ ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமாக போற்றப்படும் திருச்செங்கோடு மலை மீது அர்த்த நாரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த மலைக்கோவிலிலிருந்து கிழக்கு புறமாக மலை உச்சிக்கு கரடு முரடான மலைப்பாதை இருக்கிறது. மலை உச்சியில் பங்கஜவல்லி சமேத பாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இதை உச்சிப்பிள்ளையார் கோவில் என்று கூறுவர்.

  இந்த உச்சி பிள்ளையார் கோவில் எதிரே உள்ள செங்குத்தான பாதையில் கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தில் திருக்கார்த்திகை தீப விழா அறக்கட்டளை சார்பில் மகாதீபம் ஏற்றப்பட்டது . 600 லிட்டர் நெய் பத்து மூட்டை பருத்தி நூல் கற்பூரம் பயன்படுத்தி மயில் முருகேஷ் சுவாமிகள் திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் அறிவாதீனம் சுவாமிகள் சிவகைலாயம் சதானந்த சுவாமிகள் ஆகியோர் மகா தீபம் ஏற்றி வைத்தனர்.

  நேற்று மூன்றாவது நாளாக பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் தீப விழா குழுவினர் மலை உச்சிக்கு சென்று திரிகளை மாற்றி விட்டு மகா தீபம் ஏற்றி வைத்தனர். தலைவர் குமரவேலு பொருளாளர் மனோகரன் துணை செயலாளர் பார்த்திபன் துணை தலைவர் வஜ்ரவேல் செயற்குழு உறுப்பினர்கள் மேஷன் மதன்குமார் சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த தீபம் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பிரகாசமாக தெரிந்தது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தீப விழா குழுவினர் மலைக்குச் சென்று திரிகளை மாற்றி தீபம் ஏற்றி வைத்தனர்.

  தொடர்ந்து 5 நாட்களுக்கு இந்த தீபம் எரியும். மார்கழி திருவாதிரை தினத்தில் தீபக் கொப்பறையில் எஞ்சி உள்ள நெய் குழம்பு மை சிவகாமி அம்பாள் நடராஜர் சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்து பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்று பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு கூறினார் .

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சிம்பு, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள திரைப்படம் மஹா.
  • இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மஹா. இதில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

  மாலிக் ஸ்ட்ரீம்ஸ் மற்றும் எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூன் 10- ஆம்  தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை.


  மஹா திரைப்படம் போஸ்டர்

  இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகிவுள்ளது. அதன்படி, ஜூலை 22-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

  'வாலு' திரைப்படத்திற்கு பிறகு சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மஹா'. இத்திரைப்படம் ஹன்சிகாவின் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘மஹா’ படத்திற்காக நடிகர் சிம்பு இடைவிடாமல் நடித்து வருவதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.
  ஹன்சிகா நடிப்பில் தற்போது 'மஹா' திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் நிறைய சவால்களை சந்தித்தாலும் அதை ஒட்டுமொத்த படக்குழுவும் மிகத் திறமையாக கையாண்டு வருகிறது. தற்போது, கோவாவில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கு சிம்பு மற்றும் ஹன்சிகா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

  எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் மதியழகன், சிம்புவுடன் பணிபுரியும் மகிழ்ச்சியான அனுபவத்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். 

  இது குறித்து அவர் கூறும்போது, "நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள் படப்பிடிப்பில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக கோவா படப்பிடிப்பில் இருக்கிறோம். இந்த கட்ட படப்பிடிப்பில் சிம்பு மற்றும் ஹன்சிகா ஆகியோர் நடிக்கும் ஒரு பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகள், பார்ட்டி, காதல் பிரிவு மற்றும் திரும்ப சேர்தல் போன்ற காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளது.   சிம்பு உடனான தருணங்கள் என்னை உற்சாகப்படுத்துகின்றன. அவரை பற்றி வெளியில் சொல்லப்பட்டதில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. முதல் நாளில் இருந்தே, நான் அவரது ஒவ்வொரு விஷயங்களையும் சந்தோஷமாக அனுபவிக்கிறேன். எங்களால் ஒரு சரியான கேரவன் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை, சிம்பு ஏதாவது பிரச்சினை செய்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அவரோ, "சார், இது ஒன்றும் திரையில் தெரிய போவதில்லை, படப்பிடிப்பில் நாம் கவனம் செலுத்துவோம் என்றார். 

  நாங்கள் மதியம் 12 மணியில் இருந்து இரவு 12:30 மணி வரை 12 மணி நேரம் தொடர்ச்சியாக படம் பிடித்தோம். ஆனாலும் அவர் அடுத்த நாள் எத்தனை மணிக்கு வர வேண்டும் என கேட்டு விட்டு தான் செல்வார். அத்தகைய ஒரு நடிகரை பெறுவது எங்களை போன்ற ஒரு வளரும் தயாரிப்பாளருக்கு ஒரு பெரிய வரம். 

  ஹன்சிகா முற்றிலும் ஒத்துழைப்பு கொடுத்து நடிக்கிறார். அவர்களின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக இருக்கிறது. இயக்குனர் ஜமீல் மிகத் திறமையாக சிறப்பாக செயல்படுகிறார். எந்த ஒரு அழுத்தத்தையும் சவால்களையும் மிகவும் எளிதாக கையாள்கிறார், ஒளிப்பதிவாளர் லக்ஷ்மணும் அவரை போலவே. இளைஞர்களை உள்ளடக்கிய ஒட்டுமொத்த குழுவும் எனர்ஜியை முழுமையாக பரப்பி வருகின்றது" என்றார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பில் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
  யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மஹா’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

  இந்த படத்தின் படப்பிடிப்பில் இயக்குனர் ஜமீல் மற்றும் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்பு - ஹன்சிகா இந்த படத்தில் கணவன் - மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.  வாலு படத்தில் நடித்த போது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது. அதன்பின்னர் இருவருமே தங்களது படங்களில் கவனம் செலுத்தத் துவங்கினர்.

  சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்திலும், மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார். இதில் மாநாடு படத்திற்காக வெளிநாடு சென்று தனது உடல் எடையை குறைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மஹா படத்தில் இடம் பெறும் சண்டைக்காட்சியில் நடிக்கும் போது நடிகை ஹன்சிகாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. #Hansika #Maha
  ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மஹா’. நாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை யூஆர் ஜமீல் இயக்கி வருகிறார். எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்து வருகிறார்.

  இப்படத்தில் இடம் பெறும் ஒரு சண்டைக் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் நடிகை ஹன்சிகா தரையில் குட்டிக் கரணம் அடிக்க வேண்டும். ஒரு சிறு கால இடைவெளியில் அது தவறாக அமைந்து, காயத்தில் முடிந்தது. விரைவான முதல் உதவி மற்றும் குழுவின் ஆதரவு ஹன்சிகாவை அந்த சம்பவத்தில் இருந்து மிக விரைவில் மீட்டது. திரும்ப திரும்ப சொல்லப்பட்ட ஆலோசனைக்கு பின்னரும் கூட, ஹன்சிகா எந்தவொரு கையசைவும் இன்றி அந்த காட்சியில் நடித்தார்.   இப்படம் ஹன்சிகாவின் 50வது படம், இசையமைப்பாளர் ஜிப்ரானின் 25வது படமாகும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘மஹா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அடுத்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. #Maha #Maha2ndLook #Hansika50
  ஹன்சிகா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். யு.ஆர்.ஜமீல் இயக்கும் இந்த படத்தின் இரு போஸ்டர்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

  அதில் ஒரு போஸ்டரில் ஹன்சிகா புகைப்பிடிக்கும் தோற்றம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. சில சாமியார்களுடன் அமர்ந்து ருத்ராட்ச மாலை காவி உடையில் ஹன்சிகா கஞ்சா புகைக்கிறார். பின்னணியில் காசி கோவில் உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. 

  இதையடுத்து ஹன்சிகா மற்றும் படத்தின் இயக்குநர் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

  அந்த போஸ்டரின் பின்னணியில் மசூதி இருக்கும்படியும், ஹன்சிகா தொழுவது போலவும், பின்னால் நிழல் உருவத்தில் துப்பாக்கியுடன் இருப்பது போன்றும் காட்சி உள்ளது. இந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. #Maha #Maha2ndLook #Hansika50 #Hansika

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘மஹா’ படத்தில் நடித்து வரும் நடிகை ஹன்சிகா மற்றும் படத்தின் இயக்குநர் ஜமீல் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Maha #Hansika
  தமிழ் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 

  அதில் இந்துக்கள் புண்ணிய பூமியாக கருதப்படும் காசியின் பின்னணியில், காவி உடை அணிந்தபடி, புகை பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை கோர்ட்டில் ஹன்சிகா மீது வழக்கு போடப்பட்டது.

  இந்த நிலையில் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஹன்சிகா மீது இந்து மக்கள் முன்னணி அமைப்பின் சார்பில் இன்று புகார் செய்யப்பட்டது. அந்த அமைப்பின் நிறுவன அமைப்பாளர் நாராயணன் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

  சினிமா துறையில் இந்து மதக் கடவுள்கள், இந்து மத துறவிகளை விமர்சிப்பது, அவர்களை குற்றவாளி போல் சித்தரிப்பது வாடிக்கையாக உள்ளது.  இதற்கு உதாரணமாக சமீபத்தில் சென்னை முழுவதும் மஹா திரைப்படத்தின் முன்னோட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த சுவரொட்டியில் நடிகை ஹன்சிகா துறவி உடை அணிந்து புகை பிடிப்பது போன்ற காட்சி இந்து மதத்தில் உள்ள பெண் துறவிகளை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது.

  இந்து மதத்தின் மீது நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் காட்சி அமைத்த இயக்குனர் ஜமீல் மீதும், போஸ் கொடுத்த ஹன்சிகா மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Maha #Hansika

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மற்ற மொழிகளில் நடிப்பதை விட தமிழில் நடிக்கவே விரும்புவதாக கூறிய ஹன்சிகா, தான் ஒரு தமிழ் பட நடிகை என்று சொல்வதில் பெருமைப்படுவதாக கூறினார். #Hansika #Maha
  துப்பாக்கி முனை படத்தை தொடர்ந்து ஹன்சிகா அடுத்ததாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். யு.ஆர்.ஜமீல் என்ற புதுமுக இயக்கும் இந்த படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகின.

  இந்த நிலையில், ஹன்சிகா அளித்த பேட்டியில் இருந்து, 

  “நான் அடிப்படையில் புத்தர் கொள்கைகளைப் பின்பற்றுகிறேன். அமைதி, அன்பு, காதல் மட்டுமே உலகத்துல இருக்கணும்னு ஆசைப்படுகிறேன். நிறைய பயணம் செய்கிறேன். வாழ்க்கைப் பாடங்களை அதுதான் அதிகமாக கற்றுக்கொடுக்கிறது. மும்பையில் முதியோர் இல்லம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டு இருக்கிறேன். இப்போது ஹன்சிகாவை ஒரு நல்ல நிலைமையில பார்க்கறீங்கன்னா அதுக்கு தமிழ் சினிமாதான் காரணம்.   குறைவான படங்கள்ல நடிக்கிறதுக்குக் காரணம், நடுவுல நான் கொஞ்சம் பிரேக் எடுத்துக்கிட்டதுதான். மற்ற மொழிகள்ல நடிக்கிறதைவிட தமிழ்ல அதிகம் நடிக்க விரும்புகிறவள் நான். ‘தமிழ் நடிகை’ன்னு சொல்லிக்கிறதுல அவ்வளவு பெருமைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார். #Hansika #Maha

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகும் மஹா படத்தின் போஸ்டர் சர்ச்சையை கிளப்பியிருக்கும் நிலையில், இதுகுறித்து இயக்குநர் ஜமீல் விளக்கம் அளித்துள்ளார். #Maha #Hansika #Hansika50
  தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் ஹன்சிகா நாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். யு.ஆர்.ஜமீல் இயக்கும் இந்த படத்தின் இரு போஸ்டர்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

  அதில் ஒரு போஸ்டரில் ஹன்சிகா புகைப்பிடிக்கும் தோற்றம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சில சாமியார்களுடன் அமர்ந்து ருத்ராட்ச மாலை காவி உடையில் ஹன்சிகா கஞ்சா புகைக்கிறார். பின்னணியில் காசி கோவில் உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.


  இதை எதிர்த்து ஹன்சிகா மற்றும் இயக்குநர் மீது பா.ம.க பிரமுகர் வழக்கு தொடர்ந்துள்ளார். மஹா படத்தின் போஸ்டர் இந்துக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாகவும், இளம்பெண்களை திசைதிருப்பும் விதமாகவும் உள்ளது என்று மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு குறித்து இயக்குநர் ஜமீலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது,

  “ஒரு இயக்குனராக புதிதாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். சாதி அல்லது மதம் தொடர்பாக யார் மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை. நான் இந்து, முஸ்லிம் என்பதை விட மனிதம் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். புகைப்பிடிக்கும் படத்தை ஒரு கதாபாத்திரமாகவே பார்க்க வேண்டும். தயவு செய்து சாதி, மத கோணத்தில் அணுக வேண்டாம். கோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கை சந்திப்போம். இதுகுறித்து வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.  நடிகை ஹன்சிகா கூறும்போது “மஹா எனது 50-வது படம். அந்த படம் பெரிய அளவில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு ஏற்ப படத்தின் போஸ்டர் பற்றி பேசுகிறார்கள். இது ஒரு சாம்பிள்தான். இன்னும் நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளன” என்றார். #Maha #Hansika #Hansika50

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. #Hansika #Maha
  ஹன்சிகா தற்போது `மஹா' என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். யு.ஆர்.ஜமீல் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். 

  எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் ஒரு போஸ்டரில் சாமியார் தோற்றத்தில் புகைப்பிடிப்பது போன்று ஹன்சிகாவின் தோற்றம் இடம்பெற்றிருந்தது.  தற்போது இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. காவி உடை அணிந்து புகைப்பிடிக்கும் நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருக்கிறது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print