search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்திய காட்சி.
    X
    வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்திய காட்சி.

    வியாபாரிகளுடன் போலீசார் ஆலோசனை

    ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரிலும், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் ஆலோசனையின் பேரிலும் ஆழ்வார்திருநகரி காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் பெட்டிக்கடை மற்றும் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை, குட்கா, கஞ்சா பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்யும் பொருட்டு ஆழ்வார்திருநகரியில் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காவல் நிலையத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, பான்பராக் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்யவோ பதுங்கி வைக்கவோ கூடாது என்றும், 100சதவீத தடை செய்ய வேண்டும் என்றும் மீறினால் சட்டப்படி அந்த கடைக்கு சீல் வைக்கப்பட்டு குற்றவியல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினர்.

    கூட்டத்தில் ஆழ்வார் திருநகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

     மேலும் சட்டத்திற்கு புறம்பாக புகையிலை பொருட்களை விற்பனை செய்ய மாட்டோம் எனவும், அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறினார்கள்.
    Next Story
    ×