search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
    X
    திருவள்ளூரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

    சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு: காஞ்சிபுரம்-திருவள்ளூரில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே வீட்டு வரி, சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவள்ளூர்:

    தமிழகத்தில் வீட்டு வரி, சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகம் அருகே அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி, மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி.ரமணா, வடக்கு மாவட்ட செயலாளர் பி.பலராமன், தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர், மத்திய மாவட்ட செயலாளர் பா.பெஞ்சமின் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், கோ.ஹரி, முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ராம்குமார், நொளம்பூர் மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் இமானுவேல், அம்மா பேரவை மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன், நகர எம்.ஜி.ஆர். அணி இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன், திருவள்ளூர் நகர கழக செயலாளர் கந்தசாமி, மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் நேசன் உள்பட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின்போது வீட்டுவரி, சொத்து வரியை குறைக்கவேண்டும் எனவும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கள் பத்மஸ்ரீ பாபி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரே மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் மைதிலி, காஞ்சி பன்னீர்செல்வம், கே.யூ.எஸ். சோமசுந்தரம், வள்ளிநாயகம், எஸ். எஸ்.ஆர். சத்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×