என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு பாராட்டிய ரஜினிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உங்களில் ஒருவன் நூல் படித்து முடித்த ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
  சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 'உங்களில் ஒருவன்' நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த
  விழாவில் அரசியல் மற்றும் சினிமாத் துறையைச் சேர்ந்த பலரும் கலந்துக் கொண்டனர்.

  பின்னர், முதல்வர் ஸ்டாலின் எழுதிய உங்களில் ஒருவன் புத்தகம் நடிகர் ரஜினிகாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  இந்த புத்தகத்தை படித்து முடித்த ரஜினிகாந்த், முதல்வர் ஸ்டாலினுக்கு தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

  இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் கூறியதாவது:-

  'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி.

  உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல, இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது.

  இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

  இதையும் படியுங்கள்.. 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன- தி.மு.க. அரசின் சாதனைகளை மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார்
  Next Story
  ×