என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  நிகழ்ச்சியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ-. கலந்து கொண்டு பேசிய காட்சி.
  X
  நிகழ்ச்சியில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ-. கலந்து கொண்டு பேசிய காட்சி.

  ஏரலில் டிஜிட்டல் முறையில் காங்கிரஸ் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஏரலில் டிஜிட்டல் முறையில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பதை எல்.இ.டி. திரை மூலமாக நிர்வாகிகளுக்கு விளக்கி கூறி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்ச்சியை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார்.
  தூத்துக்குடி:

   ஏரல் பஸ் நிலையம் அருகில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

  நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, காங்கிரஸ் கொடியேற்றி வைத்து புதிய கட்சி அலுவல கத்தை திறந்து வைத்தார். 

  மேலும் டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்ப்பதை எல்.இ.டி. திரை மூலமாக நிர்வாகிகளுக்கு விளக்கி கூறி புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். 

  மாவட்ட துணைத்தலைவர் சங்கர், விவசாய பிரிவு தலைவர் ராமகிருஷ்ணன், மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   ஸ்ரீவைகுண்டம் யூனியன் கவுன்சிலர் பாரத் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் எடிசன், பொதுச்செயலாளர் சிவகளை பிச்சையா, செயலாளர் சந்தனகுமார், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன்துரை, உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×