என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
  X
  கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

  கொரோனா பரிசோதனைகளை குறைக்க தமிழக அரசு திட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சுமார் 60 ஆயிரமாக குறைக்க திட்டமிட்டுள்ளது.
  சென்னை:

  கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் இருந்தே முழுமையாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலமாக தமிழக அரசு இருந்து வருகிறது.

  கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கும்போது தினசரி ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில் பரிசோதனையும் குறைக்கப்பட்டு வருகிறது.

  இந்திய அளவில் கொரோனா தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளதால், வழிகாட்டு நெறிமுறைகளை எளிதாக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா பரிசோதனையை குறைக்க உத்தரவிட்டுள்ளது.

  சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள தகவலில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற பரிசோதனைகளை தவிர்க்க வேண்டும். சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு திணறல் அறிகுறி உள்ளோருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

  பாசிட்டிவ் நபருடன் தொடர்புடைய 60 வயதிற்கு மேட்பட்டோருக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுககு சுழற்சி முறையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Next Story
  ×