என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கொரோனா தடுப்பூசி
  X
  கொரோனா தடுப்பூசி

  தமிழகம் முழுவதும் ஜனவரி 22ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் இதுவரை 18 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன.
  சென்னை:

  தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தடுப்பூசி போடும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக செப்டம்பர் மாதத்தில் இருந்து மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
   
  மேலும், 100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  தற்போது வரை 18 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளது.

  இந்நிலையில், நேற்று பொங்கல் விடுமுறை என்பதால் தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை. 19-வது தடுப்பூசி முகாம் ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×