search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைமைச்செயலகம்
    X
    தலைமைச்செயலகம்

    அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க 13 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

    சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள 10-வது மாடி கட்டிடத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் நாளை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது.
    சென்னை:

    நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசும், அனைத்து கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

    இதற்காக தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் ஆர்.என்.ரவி இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

    இந்த நிலையில் பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளை சார்ந்த எம்.பி.க்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு சென்று சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படுவதில் ஏற்படும் காலதாமதம் குறித்து விரிவாக மனு கொடுத்து விட்டு வந்தனர்.

    இதன் அடுத்தகட்டமாக மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க முயன்றனர். ஆனால் அவர் தமிழக எம்.பி.க்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்


    இதுகுறித்து சட்டசபையில் நேற்று விரிவாக பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நாளை (8-ந்தேதி) கூட்டி ஆலோசிக்க இருப்பதாக தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள 10-வது மாடி கட்டிடத்தில் அமைந்துள்ள கூட்டரங்கில் நாளை காலை 10 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்குகிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க 13 கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது. அந்த கட்சிகள் விவரம் வருமாறு:-

    தி.மு.க.

    அ.தி.மு.க.

    காங்கிரஸ்

    பா.ம.க.

    பா.ஜ.க

    விடுதலை சிறுத்தைகள்

    இந்திய கம்யூனிஸ்டு

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு

    ம.தி.மு.க.

    மனிதநேய மக்கள் கட்சி

    கொங்கு மக்கள் தேசிய கட்சி

    தமிழக வாழ்வுரிமை கட்சி

    புரட்சி பாரதம்

    இந்த கட்சிகள் தவிர சட்டசபையில் இடம்பெறாத கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்புவதா? வேண்டாமா? என்பது பற்றி அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


    Next Story
    ×