என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கே.எஸ். அழகரி
  X
  கே.எஸ். அழகரி

  வேண்டாம் விபரீதம்: அண்ணாமலைக்கு கே.எஸ். அழகிரி எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் காங்கிரசே இல்லை என்று கூறுகிற அண்ணாமலைக்கு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகரி பதிலடி கொடுத்துள்ளார்.
  தமிழகத்தில் காங்கிரசே இல்லை என்று தமிழக பா.ஜனதா அண்ணாமலை விமர்சம் செய்திருந்தார். இதற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி பதிலடி கொடுத்துள்ளார்.

  இதுகுறித்து கே.எஸ். அழகிரி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘கடந்த 2019 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வி அடைந்த பாஜக, 2021 சட்டமன்ற தேர்தலில் 23 இல் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முன்னாள், இந்நாள் தலைவர்கள் தோல்வியடைந்ததை மறந்து பேசலாமா?

  ஆனால் மக்களவையில் 9 இடங்களில் போட்டியிட்டு 8  இடங்களிலிலும், சட்டமன்றத்தில் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களிலும் வெற்றிபெற்று தமிழ்நாடு காங்கிரஸ் சாதனை படைத்துள்ளது. 

  தமிழகத்தில் காங்கிரசே இல்லை என்று கூறுகிற அண்ணாமலை இத்தகைய குதர்க்க பேச்சுகளின் மூலம் மலிவான விளம்பரத்தை தேட முயல்கிறார்.  வேண்டாம் விபரீதம்.’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
  Next Story
  ×