search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மகளிர் குழுக்கள் பெயரில் ரூ.1½ கோடி மோசடி- கூட்டுறவு வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது

    போலியான ஆவணங்களை பயன்படுத்தி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பணம் கொடுத்ததாக ரூ. 1 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரம் கையாடல் செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பரமக்குடி:

    பரமக்குடி அருகே உள்ள நயினார் கோவிலில் ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை செயல்பட்டு வருகிறது.

    இந்த கிளையில் 2012 முதல் 2018 வரை போலி ஆவணங்கனை பயன்படுத்தி மகளிர் சுய உதவி குழு கணக்கில் கடன் வழங்கியதாக பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.

    இது குறித்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் துணை மேலாளர் கோவிந்தன் மதுரை மண்டல பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். துணை சூப்பிரண்டு பாண்டி செல்வம் விசாரணை நடத்தினார்.

    அதில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பணம் கொடுத்ததாக ரூ. 1 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரம் கையாடல் செய்தது உறுதியானது.

    கிளை மேலாளர் பூரணசந்திரமதி, நிதியாளர் சத்தியமூர்த்தி, துணை மேலாளர் சுந்தர காளீஸ்வரி ஆகியோர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது உறுதியானது.

    இதனைத்தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ரூ. 22 லட்சத்து 57 ஆயிரத்து 269 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×