search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு வங்கி"

    • 2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • இந்த ஊழல் நடந்தபோது, மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குனராக இருந்தார்

    மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே முதற்கட்டத் தேர்தலின்போது 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

    மகாராஷ்டிராவில் வி.ஐ.பி தொகுதியாகக் கருதப்படும் பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், துணை முதல் மந்திரி அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர். இந்த பாராமதி தொகுதிக்கு மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீதான ₹25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை என்றும் வழக்கை மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை மூடியுள்ளது.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தலைவர் ஆனந்த் துபே கருத்து தெரிவித்துள்ளார். அதில், "பிரதமர் மோடி இந்தக் குற்றச்சாட்டை எழுப்பி, இது ஊழல் குடும்பம் என்று கூறினார். ஆனால், இன்று அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு பாஜகவில் இணைந்த தலைவர்கள் அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் எந்த குற்றச் செயலையும் பார்க்கவில்லை என மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது" என அவர் கூறினார்.

    2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த ஊழல் நடந்தபோது, தற்போது மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் உட்பட, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குநர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • சம்பளக்கடனை பொறுத்தமட்டில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.7 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
    • கடனை திரும்ப செலுத்துவதை பொறுத்தமட்டில் ஏற்கனவே இருந்து வந்த காலவரம்பான 350 நாட்கள் என்பதில் மாற்றம் இல்லை.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் அனைத்து வகை கடன்களையும் உயர்த்தி வழங்க கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது.

    அதன்படி, நகைக்கடன் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.30 லட்சம் வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதேவேளையில் ஓராண்டுக்குள் இந்த கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற காலவரம்பில் மாற்றம் இல்லை. சம்பளக்கடனை பொறுத்தமட்டில் அதிகபட்ச கடன் தொகையாக ரூ.7 லட்சம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

    இந்த கடனை பொறுத்தமட்டில் 84 மாதங்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என்ற காலவரம்பு 120 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேபோன்று சிறு வணிக கடனாக ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்த நிலையில், இந்த கடன் தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கடனை திரும்ப செலுத்துவதை பொறுத்தமட்டில் ஏற்கனவே இருந்து வந்த காலவரம்பான 350 நாட்கள் என்பதில் மாற்றம் இல்லை.

    ரூ.50 ஆயிரம் வரையிலான தனிநபர் கடனுக்கு ஒரு நபர் ஜாமீன் உத்தரவாதமும், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான தனிநபர் கடனுக்கு 2 பேர் ஜாமீன் உத்தரவாதமும் அளிக்க வேண்டும் என்றும், ஜாமீன் உத்தரவாதம் வழங்கும் நபர்கள் அரசு அல்லது தனியார் துறையில் சம்பளம் பெறும் பணியாளராகவும், பான் கார்டு உள்ளிட்ட இதர ஆவணங்களை கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

    • சிறப்பு கடன் வழங்கும் விழா நன்னகரம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது.
    • 7,213 விவசாயிகளுக்கு ரூ.90 கோடிக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கூட்டுறவு துறை மூலம் சிறப்பு கடன் வழங்கும் விழா நேற்று நன்னகரம் சமுதாய நலக் கூடத்தில் நடைபெற்றது.

    இவ்விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் முன்னிலை வகித்தார். தென்காசி மண்டல இணைப்பதிவாளர் நரசிம்மன் வரவேற்று பேசினார்.

    விழாவில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழு கடன், விவசாய பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புகடன், அடமான கடன் மற்றும் சிறுவணிக கடன் உட்பட ரூ.2 கோடியே 23 லட்சம் மதிப்பில் 52 பயனாளி களுக்கு கடன்களுக்கான காசோலைகளை வழங்கி னார்.

    தொடர்ந்து கலெக்டர் ரவிச்சந்திரன் பேசியதா வது:-

    தென்காசி மாவட்டத்தில், 87 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 1 நகர கூட்டுறவு கடன் சங்கம், 4 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் 2 வேளாண் விற்பனைச் சங்கங்கள் மற்றும் நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 16 கிளைகள் மூலமாக பல்வேறு வகை யான கடன்கள் வழங்கப் பட்டு வருகின்றன.

    விவசாயிகள், நகர்ப்புற மக்கள் மற்றும் பொருளா தாரத்தில் பின்தங்கிய ஏழை எளிய நலிவுற்ற மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் கூட்டுறவு இயக்கம் சேவை செய்து வருகிறது.

    தென்காசி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் தற்போது வரை 7,213 விவசாயிகளுக்கு ரூ.90 கோடிக்கு வட்டியில்லா பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில் கால்நடை பராமரிப்புக் கடனாக 4,686 நபர்பகளுக்கு ரூ.30 கோடி வழங்கப்ப ட்டுள்ளது.

    மேலும், தென்காசி மாவட்டத்தில் இதர வகை கடன்களாக நடப்பு நிதி யாண்டில் 89 மாற்றுத்திறனா ளிகளுக்கு ரூ.3,248 லட்சமும், 102 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.27,48 கோடியும் வழங்கப் பட்டுள்ளது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் வீடு அடமான கடனாக 43 நபர்க ளுக்கு ரூ.2150 லட்சமும் வழங்கப்பட்டு ள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் 4 மருந்தகங்கள் தொடங்கப் பட்டு குறைந்த விலையில் 20 சதவீதம் தள்ளுபடியில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் பொது சேவை மையங்கள் மூலமாக கிராம மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் தொடர்பான மின்னணு சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாண்டில் இதுவரை 45,818 சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இங்கு வருகை தந்துள்ள கூட்டுறவு நிறுவனங்களின் உறுப்பினர்கள் கூட்டுற வுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியா ளர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு கூட்டுறவு சங்கங்கள் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் சங்கத்திற்கு வருகை தரும் சங்க உறுப்பி னர்கள் மற்றம் வாடிக்கையா ளர்களின் நம்பிக்கையினை யும், பாராட்டினையும் பெறு கின்ற வகையில் உங்களின் பணிகள் சிறப்புடன் அமைய வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    இவ்விழாவில் சங்கரன்கோவில் சரகத் துணைப்பதிவாளர் திவ்யா, மேலகரம் பேரூராட்சி தலைவர் வேணி வீரபாண்டி யன், மேலகரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜீவா னந்தம், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சிங்கத்துரை, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    துணைப்பதிவாளர் கார்த்திக் கவுதம் நன்றி கூறினார்.

    • கூட்டுறவு வங்கி விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • பொது மேலாளர்கள் காளைலிங்கம், விஜயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில், மதுரை சரக வருமான வரி அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி வரவேற்றார். வங்கி அலுவலர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்கள், செயலாட்சியர்கள் கலந்து கொண்டனர். முகாமில் வருமானவரி பிடித்தம் செய்வது குறித்து வருமான வரித்துறை துணை ஆணையாளர் மதுசூதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர், செயலாட்சியர் ரவிசந்திரன் ஆகியோர் பேசினர். உதவி பொது மேலாளர்கள் காளைலிங்கம், விஜயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • கடன் அனுமதி உத்தரவை செல்லம்பட்டி கள அலுவலர் நடராஜன் மற்றும் சங்க செயலாளரிடம் வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையமாக தரம் உயர்த்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கியியல்) வில்வசேகரன் தலைமை தாங்கினார். இதில் மதுரை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி, தேனி மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/செயலாட்சியர் ஜீவா, மதுரை மற்றும் தேனி மாவட்ட துணைப்பதிவாளர்கள், துறை அலுவலர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் கே.நாட்டாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பல்நோக்கு சேவை மைய திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை எந்திரத்திற்கான ரூ.27 லட்சத்து 73 ஆயிரத்து 826 மதிப்புள்ள கடன் அனுமதி உத்தரவை செல்லம்பட்டி கள அலுவலர் நடராஜன் மற்றும் சங்க செயலாளரிடம் வழங்கப்பட்டது.

    • மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுது.
    • நகர மற்றும் தொடக்க நிலை வங்கிகள் ஆகியவற்றை முற்றிலும் கணினி மயமாக்கிட வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நீண்ட கால நிலுவை கோரிக்கைகளுக்கு தீர்வு காணக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுது. ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை 30 மாதத்திற்கும் மேலாக கால தாமதமாகி வருகிறது. இதனை உடனடியாக ஆணையாக வெளியிட வேண்டும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். நகர மற்றும் தொடக்க நிலை வங்கிகள் ஆகியவற்றை முற்றிலும் கணினி மயமாக்கிட வேண்டும்.

    நகர கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் படி கருணை ஓய்வூதியம் உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம்,
    • நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது

    நாகர்கோவில் :

    குருந்தன்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதி யில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டங்களான, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப் பட்டதை நேரில் பார்வை யிட்டது உள்ளிட்டவை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சியில் காட்சிப்ப டுத்தப்பட்டது.

    மேலும், முதல்-அமைச்ச ரை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்ற ஸ்ரீதர் நேரில் சந்தித்தது, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட் டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி யது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்திமக்கள் தொடர்பு துறையின் சார்பாக அமைக் கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொது மக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங் கள் குறித்து தெரிந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடன்கள் வழங்குவதில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தது.
    • இதில் ரூ.15 லட்சத்து 77 ஆயிரத்து 300 கையாடல் செய்தது தெரியவந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே தலைஞாயிறு ஆய்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன், பயிர்கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்குவதில் முறைகேடு நடந்து இருப்பதாக புகார்கள் எழுந்தது.

    இதையடுத்து கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டதில் நகை கடன் வழங்குதில் முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதன் பேரில் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் பன்னீர்செல்வம் நாகப்பட்டினம் பொருளாதார குற்ற பிரிவு போலீசில் புகார் செய்தார்.

    இதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் ரூ.15 லட்சத்து 77 ஆயிரத்து 300 கையாடல் செய்தது தெரியவந்தது. மேலும் ஆய்மூர் ராமர் மடத்தெருவை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர் அறிவழகன், எழுத்தர்கள் ஆறுமுகம், இளையராஜா, செயலாளர் (பொறுப்பு) அன்புமொழி, தற்காலிக பணியாளர் கணேசன் ஆகியோரை கைது செய்தனர்.

    இவர்களை வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜார் செய்தனர். பின்னர் அவர்கள் நாகப்பட்டினம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

    • இணையதளம் மூலம் இந்த மோசடியை செய்தவர் யார் என்று கண்டறிய முடியவில்லை.
    • இந்த சைபர் திருட்டு, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    புதுடெல்லி :

    இமாசலபிரதேச மாநிலம் கங்க்ரா மாவட்டத்தை சேர்ந்த சில நண்பர்கள், 1960-ம் ஆண்டு ஒரு கடன் சங்கத்தை தொடங்கினர். 1972-ம் ஆண்டு, அச்சங்கம், கங்க்ரா கூட்டுறவு வங்கியாக மாறியது. தற்போது, டெல்லியில் 12 கிளைகளுடன் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஆர்.டி.ஜி.எஸ்., நெப்ட் போன்ற மின்னணு பண பரிமாற்ற வசதிகளை அளிப்பதற்காக ரிசர்வ் வங்கியிடம் கங்க்ரா கூட்டுறவு வங்கி ஒரு நடப்புகணக்கு வைத்துள்ளது.

    நாள்தோறும் தனது நடப்புகணக்கில் இருந்து செட்டில்மெண்ட் கணக்குக்கு ரூ.4 கோடியை மாற்றுமாறு ரிசர்வ் வங்கிக்கு கங்க்ரா கூட்டுறவு வங்கி ஒரு நிலையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதன்படி, ரூ.4 கோடியை ரிசர்வ் வங்கி மாற்றுவதுடன், ஒவ்வொரு நாளின் இறுதியில், அன்றைய தினம் செட்டில்மெண்ட் கணக்கில் நடந்த மின்னணு பண பரிமாற்றங்களின் விவரங்களை கங்க்ரா கூட்டுறவு வங்கிக்கு மின்னஞ்சலில் அறிக்கையாக அனுப்பி வைக்கும். அதை கூட்டுறவு வங்கி சரிபார்த்துக் கொள்ளும்.

    அதுபோல், கடந்த மாதம் 19-ந் தேதி நடந்த பரிமாற்றங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அனுப்பி வைத்த அறிக்கையில், ரூ.3 கோடியே 14 லட்சம், யாரோ ஒருவரின் நடப்புகணக்குக்கு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்களால் அதற்கான காரணத்தை கண்டுபிடிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, மேலும் அதிர்ச்சி அளிக்கும்வகையில், அடுத்த 2 நாட்களில், ரூ.2 கோடியே 40 லட்சமும், ரூ.2 கோடியே 23 லட்சமும் அந்த நடப்புகணக்குக்கு போனது. ஆக, 3 தடவையாக மொத்தம் ரூ.7 கோடியே 79 லட்சம் திருட்டு போனது.

    எந்த நடப்புகணக்குக்கு பணம் போனது என்பதை கங்க்ரா கூட்டுறவு வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இருப்பினும், இணையதளம் மூலம் இந்த மோசடியை செய்தவர் யார் என்று கண்டறிய முடியவில்லை.

    இதுகுறித்து டெல்லி போலீசில் கங்க்ரா கூட்டுறவு வங்கி முதுநிலை மேலாளர் சதேவ் சங்வான் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரிசர்வ் வங்கி மேற்பார்வையில் நடக்கும் வங்கியில், ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் நடப்புகணக்கில் நடந்திருக்கும் இந்த சைபர் திருட்டு, ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.
    • இதனை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மற்றும் மேம்படுத்த வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டியுடன் அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ் 32 கிளைகள், இணைப்பு சங்கங்களான 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், 56 பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

    சிவகங்கையை தலைமை யிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், மேம்படுத்த வேண்டிய வசதிகள் மற்றும் நியமிக்கப்பட வேண்டிய பணியாளர்கள், காலிப்பணியிடங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    தற்பொழுது தற்காலிகமாக காந்தி வீதியில் செயல்பட்டு வரும் மத்திய வங்கியின் தலை மையக வங்கி கிளையில் 7 ஆயிரத்து 926 வங்கி வாடிக்கையாளர் கணக்குகளுடன் ரூ.110 கோடிக்கு இட்டுவைப்புகள் நிலுவை உள்ளதையும், அரசு திட்ட கடன்களான சிறுவணிக கடன்கள், மாற்றுத்திறனாளி கடன்கள், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் மற்றும் இதர கடன்களுடன் ரூ.84 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    ஏ.டி.எம்., தனிநபர் பாதுகாப்பு பெட்டகம் மற்றும் மொபைல் பேங்கிங் வசதிகளுடன் செயல்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஐ.எம்.பி.எஸ். மற்றும் யு.பி.ஐ. சேவைகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டது.

    மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகம் பெருந்திட்ட வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு தேர்வு செய்வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அமைச்சர் பெரியகருப்பன் காந்தி வீதியில் உள்ள சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பழுதடைந்த தலைமையக கட்டிடத்தை ஆய்வு செய்தார். அந்த கட்டிடத்தை இடித்து விட்டு, மத்திய வங்கி தலைமையக கிளைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது மத்திய வங்கியின் மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜீனு, பொது மேலாளர் (பொறுப்பு) மாரிச்சாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • கடந்த மாதம் 29-ந்தேதி ஆசிரியை வங்கிக்கு சென்று லாக்கரில் வைத்திருந்த நகைகளை பார்த்து இருக்கிறார்.
    • போலீசார் கூட்டுறவு வங்கிக்கு சென்று பார்வையிட்டு வங்கி அதிகாரிகள் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பெங்களூரு சாலையில் உள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவருடைய மனைவி புஷ்பகலை (வயது 52). இவர் ஓசூர் ஜூஜூவாடி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தனது நகை மற்றும் தாயாரின் நகை, மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் என மொத்தம் 90 பவுன் நகைகளை கிருஷ்ணகிரியில் கோ-ஆப்ரெட்டிவ் காலனியில் இயங்கி வரும் தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நகர கிளை லாக்கரில் வைத்து இருந்தார்.

    கடந்த மாதம் 29-ந்தேதி ஆசிரியை வங்கிக்கு சென்று லாக்கரில் வைத்திருந்த நகைகளை பார்த்து இருக்கிறார். அதன் பின்னர் ஆசிரியை 40 பவுன் நகைகளை வீட்டுக்கு எடுத்து சென்று விட்டார். மீதம் 50 பவுன் நகையை கூட்டுறவு வங்கி லாக்கரில் ஆசிரியை வைத்து இருந்தார்.

    இந்த நிலையில், கடந்த 25-ந்தேதி கூட்டுறவு வங்கி அதிகாரிகள் ஆசிரியையை தொடர்பு கொண்டனர். அப்போது உங்களது வங்கி லாக்கர் திறந்த நிலையில் உள்ளது. எனவே வங்கிக்கு வருமாறு அவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை நேற்று முன்தினம் குடியரசு தின விடுமுறை என்பதால் நேற்று காலை வங்கிக்கு சென்று தனது லாக்கரில் இருந்த நகைகளை பார்த்தார்.

    அப்போது அதில் 50 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதுபற்றி வங்கி அதிகாரிகளிடம் ஆசிரியை கேட்டார். மேலும் இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கூட்டுறவு வங்கிக்கு சென்று பார்வையிட்டு வங்கி அதிகாரிகள் மற்றும் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். கூட்டுறவு வங்கி லாக்கரில் 50 பவுன் நகைகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • போலியாக கணக்கை உருவாக்கி ரூ. 25 கோடி வரை மோசடி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
    • துணை செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் தலைமறைவாக இருந்து வந்தார்.

    குரும்பூர்:

    குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நகைக்கடன் தள்ளுபடிக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி மற்றும் 13-ந்தேதி நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

    ரூ.25 கோடி மோசடி

    அப்போது 548 நகை பைகளில் 261 நகை பைகள் மாயமானது தெரியவந்தது. இதேபோல் வைப்புநிதியும் இருப்பில் இருப்பது போன்று போலியாக கணக்கை உருவாக்கி ரூ. 25 கோடி வரை மோசடி செய்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    இதுதொடர்பாக வங்கி செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் வங்கி தலைவர் தலைவர் முருகேசப்பாண்டியன் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில் செயலாளர் தேவராஜ் உடல்நிலை சரியில்லை என்று கூறி முன்ஜாமீன் பெற்றார்.

    துணை செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. குமரேசன், இன்ஸ்பெக்டர் பத்திரகாளி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அவர் குற்றாலத்தில் சொகுசு பங்களா ஒன்றில் இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து பாளை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இதனைத்தொடர்ந்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து, அவர் கொக்கிரகுளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×