search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குரும்பூர் கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு;  கைதான துணை செயலாளர் ஜெயிலில் அடைப்பு-1 வருடம் தலைமறைவாக இருந்தவர்
    X

    குரும்பூர் கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு; கைதான துணை செயலாளர் ஜெயிலில் அடைப்பு-1 வருடம் தலைமறைவாக இருந்தவர்

    • போலியாக கணக்கை உருவாக்கி ரூ. 25 கோடி வரை மோசடி செய்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
    • துணை செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் தலைமறைவாக இருந்து வந்தார்.

    குரும்பூர்:

    குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நகைக்கடன் தள்ளுபடிக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி மற்றும் 13-ந்தேதி நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

    ரூ.25 கோடி மோசடி

    அப்போது 548 நகை பைகளில் 261 நகை பைகள் மாயமானது தெரியவந்தது. இதேபோல் வைப்புநிதியும் இருப்பில் இருப்பது போன்று போலியாக கணக்கை உருவாக்கி ரூ. 25 கோடி வரை மோசடி செய்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    இதுதொடர்பாக வங்கி செயலாளர் தேவராஜ், துணை செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் வங்கி தலைவர் தலைவர் முருகேசப்பாண்டியன் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில் செயலாளர் தேவராஜ் உடல்நிலை சரியில்லை என்று கூறி முன்ஜாமீன் பெற்றார்.

    துணை செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை தூத்துக்குடி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. குமரேசன், இன்ஸ்பெக்டர் பத்திரகாளி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தேடி வந்தனர்.

    இந்நிலையில் அவர் குற்றாலத்தில் சொகுசு பங்களா ஒன்றில் இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து பாளை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இதனைத்தொடர்ந்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து, அவர் கொக்கிரகுளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×