மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வுக்கூட்டம்

மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வுக்கூட்டம் நடந்தது.கடன் அனுமதி உத்தரவை செல்லம்பட்டி கள அலுவலர் நடராஜன் மற்றும் சங்க செயலாளரிடம் வழங்கப்பட்டது.
மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வுக்கூட்டம்
Published on

மதுரை

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை மையமாக தரம் உயர்த்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூடுதல் பதிவாளர் (நிதி மற்றும் வங்கியியல்) வில்வசேகரன் தலைமை தாங்கினார். இதில் மதுரை மண்டல இணைப்பதிவாளர் குருமூர்த்தி, தேனி மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/செயலாட்சியர் ஜீவா, மதுரை மற்றும் தேனி மாவட்ட துணைப்பதிவாளர்கள், துறை அலுவலர்கள், வங்கி அலுவலர்கள் மற்றும் சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கே.நாட்டாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு பல்நோக்கு சேவை மைய திட்டத்தின் கீழ் பயிர் அறுவடை எந்திரத்திற்கான ரூ.27 லட்சத்து 73 ஆயிரத்து 826 மதிப்புள்ள கடன் அனுமதி உத்தரவை செல்லம்பட்டி கள அலுவலர் நடராஜன் மற்றும் சங்க செயலாளரிடம் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com