search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்லூர் ராஜூ
    X
    செல்லூர் ராஜூ

    அ.தி.மு.க. நிர்வாகிகள் நாளை மதுரையில் ஆலோசனை- செல்லூர் ராஜூ அறிக்கை

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆலோசனைப்படி அ.தி. மு.க. பொன்விழா வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    மதுரை:

    மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக வரலாற்றில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்து தமிழகத்தின் ஏழை-எளிய மக்களுக்காக உலகமே போற்றும் சத்துணவு திட்டம் தொடங்கி வரலாற்று சிறப்புமிக்க புரட்சிகரமான மக்களுக்கான திட்டங்களை அ.தி.மு.க. செயல்படுத்தி உள்ளது.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அ.தி.மு.க.வை நடத்தி செல்லும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆலோசனைப்படி அ.தி. மு.க. பொன்விழா வருகிற 17-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

    அன்று மதுரை மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் திருஉருவபடங்களை அலங்கரித்து, ஒலிபெருக்கி அமைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் ஏழை எளியோர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க வேண்டும்.

    இதுகுறித்த ஆலோசனை கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு காமராஜர் சாலையில் உள்ள அருணாச்சல நாடார் கமலாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. மாவட்ட, பகுதி வார்டு அனைத்து நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×