search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    கனமழைக்கு வாய்ப்புள்ள 9 மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம் தகவல்

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    சென்னை:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

    திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.

    நாளை 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    மழை

    தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும். வடகிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை (24-ந் தேதி) மாலை குறைந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மேலூர் 7 செ.மீ., திருபுவனம், புலிப்பட்டி தலா 6 செ.மீ., கலவை 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது. இத்தகவலை சென்னை வானிலை அதிகாரி கீதா தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×