search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்- வானிலை ஆய்வு மையம்

    சென்னை நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் வருகிற 24-ந்தேதி வரை 5 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    மழை

    இதேபோல திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, வேலூர், நாமக்கல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, ஈரோடு, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இந்த 5 நாளில் வெவ்வேறு தினங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தில் வாலாஜாவில் அதிகபட்சமாக 11 செ.மீ மழை பதிவாகி இருந்தது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    Next Story
    ×