search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    மோடிக்கு, மு.க.ஸ்டாலின்- ராமதாஸ் வாழ்த்து

    பிரதமர் மோடி இன்று தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    பிரதமர் மோடி இன்று தனது 71-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    இன்று 71-வது பிறந்த நாள் காணும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்துடன் அவர் நூறாண்டு வாழ வேண்டும். நாட்டை வழி நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×