என் மலர்

  செய்திகள்

  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
  X
  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

  1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 30-ந்தேதி முடிவு: அமைச்சர் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பள்ளிகள் திறப்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
  திருச்சி:

  திருச்சியில் இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்த பள்ளிக்கல்வித்துறையின் அறிக்கை இன்று முதல்- அமைச்சர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

  பள்ளிகள் திறப்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் சிலர் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்றும், மற்றும் சிலர் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  அந்த துறை சார்ந்த மூத்த அதிகாரிகளின் முடிவுகளும் முதல்வருக்கு தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார்.

  வரும் 30-ந்தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் அளிக்கும் அறிக்கை மற்றும் மருத்துவ நிபுணர்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை நிபுணர்கள் கொடுக்கும் ஆலோசனையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.


  Next Story
  ×