search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக்
    X
    பிளாஸ்டிக்

    இனி இந்த வகை பிளாஸ்டிக் பயன்படுத்த தடை- அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

    120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் அடுத்த ஆண்டு (2022) டிசம்பர் 31-ந்தேதி முதலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    சுற்றுச்சூழல் மானிய கோரிக்கையை சட்டசபையில் இன்று அமைச்சர் மெய்யநாதன் தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை அறிவித்து நடைமுறையில் உள்ளது.

    பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்தும் பொருட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டின் ஆணையின்படியும், “உற்பத்தி பகுதிகளில் பேக்கிங் செய்ய பயன்படும் பிளாஸ்டிக் பைகள்” மீதும் தடை விதிக்கப்பட்டது. இத்தடை ஆணையை மீறும் தொழிற்சாலைகள் மீது வாரியம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

    மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், திருத்தி அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை விதிகள், 2021-ஐ அறிவிக்கை வெளியிட்டது.

    பிளாஸ்டிக் தடை


    இதன்படி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களான 100 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக்/ பி.வி.சி. பேனர்கள், தட்டுகள், கோப்பைகள், உணவு உண்ண அல்லது பரிமாற பயன்படும் பொருட்கள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது மொட்டுகள், அலங்காரத்திற்கான தெர்மோகோல் பொருட்கள், பிளாஸ்டிக் கொடிகள், மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள் முதலியவை அடுத்த ஆண்டு (2022) ஜூலை முதல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும் 60 கிராம், சதுர மீட்டர் அளவிற்கு கீழ் உள்ள நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள் வருகிற நவம்பர் 30-ந்தேதி முதலும், 120 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் கைப்பைகள் அடுத்த ஆண்டு (2022) டிசம்பர் 31-ந்தேதி முதலும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×