search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிக் கல்வித்துறை
    X
    பள்ளிக் கல்வித்துறை

    10-ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு

    இணையதளங்களில் பதிவெண், பிறந்த தேதியை பதிவிட்டு சான்றிதழை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா தொற்று காரணமாக 2020-21 கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது.

    மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், மாணவர்களின் வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 10-ந்தேதி  வெளியானது. தற்போது மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வெளியிடப்பட்டுள்ளது.

    10 ஆம் வகுப்பு மாணவர்கள், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இன்று காலை 11 மணி முதல் 31 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in, tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் பதிவெண், பிறந்த தேதியை பதிவிட்டு சான்றிதழை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×