search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    குரும்பூர் அருகே தேரி பகுதியில் தொடரும் வழிப்பறி

    போலீசார் அடிக்கடி ரோந்து சென்று வழிப்பறி கும்பலை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 43). இவர் நேற்று முன்தினம் குரும்பூரில் இருந்து பூச்சிகாடு வழியாக பரமன்குறிச்சி தேரிபகுதி காட்டுப்பாதை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

    அந்தப் பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாகும். அந்த வழியாக விரைவில் பரமன்குறிச்சி வந்துவிடலாம். திருச்செந்தூர் சென்று பரமன்குறிச்சி வந்தால் அதிக தூரம் மற்றும் நேரம் அதிகம் ஆகும். எனவே விரைவில் வந்து விடுவதற்காக பாஸ்கரன் வந்துள்ளார்.

    அப்போது ஆள் நடமாட்ட மில்லாத பூச்சிக்காடு காட்டுப் பகுதியில் வரும் போது ஒரு கும்பல் பாஸ்கரனை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை கேட்டுள்ளனர். அதற்கு அவர் கொடுக்க மறுத்ததால் அதனால் அந்த கும்பல் சரமாரியாக அடித்து உதைத்து அவரிடமிருந்து ரூ.18 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் ரொக்க பணம் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர்.

    படுகாயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சென்று சிகிச்சை பெற்று உள்ளார். இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் கானம் கஸ்பாவை சேர்ந்த கந்தசாமி என்பவரிடம் ரூ. ரூ.2500-ஐ வழிப்பறி கும்பல் பறித்து சென்று உள்ளனர்.

    இது குறித்து கந்தசாமி, பாஸ்கரன் ஆகியோர் குரும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து உள்ளனர். போலீசார் அடிக்கடி ரோந்து சென்று வழிப்பறி கும்பலை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×