search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    தமிழகத்தின் நிதிநிலை குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

    தமிழகத்தின் நிதிநிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச்செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
    சென்னை:

    தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தாக கொரோனா நிவாரண நிதி வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.

    கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் இந்த மாதம் வழங்கப்பட்டது. அந்த வகையில் 2.70 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மீதி தவணை ரூ.2 ஆயிரம் ஜூன் 3-ந் தேதிக்குள் வழங்கப்படும்.

    கொரோனா நிவாரண நிதி

    இந்நிலையில் தமிழகத்தின் நிதிநிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது.

    ஆலோசனைக் கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச்செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    Next Story
    ×