search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் ஸ்டாலின்
    X
    முதல்வர் ஸ்டாலின்

    7 பேர் விடுதலை- முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7பேர் விடுதலை தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் 7 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆகியோருடன் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

    7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

    முன்னதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×