search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடுவூரில் நேற்று மழை பெய்தபோது எடுத்தபடம்.
    X
    வடுவூரில் நேற்று மழை பெய்தபோது எடுத்தபடம்.

    வடுவூரில் அக்னி வெயிலின் தாக்கத்தை தணித்த கனமழை

    வடுவூரில் அக்னி வெயிலின் தாக்கத்தை கனமழை தணித்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    வடுவூர்:

    தமிழகத்தில் கோடை காலம் என்பதால் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. அக்னி வெயிலின் தொடக்க நாளில் சில இடங்களில் மழை பெய்தாலும், பெரும்பாலான இடங்களில் வெயில் வாட்டி வதைத்தது.

    ஏற்கனவே கோடை வெயிலில் தவித்து வந்த மக்கள் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தால் மேலும் தவிக்க நேரிட்டது. திருவாரூர் மாவட்டம் வடுவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கோடை காலம் தொடங்கியதில் இருந்தே வெயில் சுட்டெரித்து வந்தது. மதிய நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்தது.

    திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட இடங்களில் ஒரு சில நாட்கள் விட்டு விட்டு மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று வடுவூரில் நேற்று கன மழை பெய்தது.

    இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அரை மணிநேரத்துக்கு மேலாக நீடித்த கன மழையால், அக்னி வெயிலின் தாக்கம் தணிந்தது. வெயிலால் தவித்து வந்த மக்கள் இந்த கன மழையினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Next Story
    ×