search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    ராணிப்பேட்டை, ஆற்காட்டில் பலத்த மழை

    ராணிப்பேட்டை மற்றும் சிப்காட் மற்றும் ஆற்காடு பகுதியில் திடீரென கரு கருவென மேகம் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டியது.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. வெயிலின் கொடுமை தாங்காமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மாலை நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்து வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் ராணிப்பேட்டை மற்றும் சிப்காட் மற்றும் ஆற்காடு பகுதியில் திடீரென கரு கருவென மேகம் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாது பலத்த மழை பெய்தது. நகரின் முக்கிய சாலைகள், தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்கள் நிரம்பி, மழை நீரும், கழிவு நீரும் சேர்ந்து ஓடியது.

    கோடை வெயிலை சமாளிக்க முடியாமல் திணறிய மக்கள், விவசாயிகள் ‌இந்த கனமழையின் காரணமாக நிம்மதி அடைந்தனர்.

    மழை பெய்து கொண்டிருந்த போது, பலத்த இடி, மின்னல்‌ இருந்தது. அதன் காரணமாக ராணிப்பேட்டை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு சுமார் 8 மணியளவில் மின்சாரம் வந்தது.
    Next Story
    ×