search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழாவில் கலந்து கொண்டவர்கள்
    X
    விழாவில் கலந்து கொண்டவர்கள்

    மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டவர்கள் விவரம்

    மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

    சென்னை:

    முதல்- அமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

    பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதை ஏற்று பதவி ஏற்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலினை வாழ்த்தினார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம்

    அ.தி.மு.க. சார்பில் முன்னாள் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கோபண்ணா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன்,

    கமல்ஹாசன்

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, பா.ஜனதா மூத்ததலைவர் இல.கணேசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்,

    மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், கொங்கு நாடு மக்கள் கட்சி தலைவர் ஈஸ்வரன், முஸ்லிம் லீக் முன்னாள் எம்.எல்.ஏ. அபுபக்கர்,

    பிரசாந்த் கிஷோர்

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா, ஆற்காடு வீராசாமி, ஐபேக் நிறுவனத் தலைவர் பிரசாந்த் கிஷோர், உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி, கவிஞர் வைரமுத்து, மற்றும் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×