search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை செயலாளர், ககாதாரத்துறை செயலாளருடன் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்திய காட்சி.
    X
    தலைமை செயலாளர், ககாதாரத்துறை செயலாளருடன் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்திய காட்சி.

    கொரோனாவுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுரை

    கொரோனா தொற்றுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய அதிகாரிகளை அனுப்ப முக ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
    சென்னை 

    தமிழ்நாட்டில் 2-வது அலை கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 952 பேரை நோய் தொற்றி உள்ளது. 122 பேர் பலியாகி உள்ளனர். 1 லட்சத்து 23 ஆயிரத்து 258 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    தமிழ்நாட்டிலேயே சென்னை நகரம்தான் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு மட்டுமே நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 பேர் இறந்துள்ளனர்.

    இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் தலைமை செயலாளர், ககாதாரத்துறை செயலாளருடன் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். 

    கொரோனாவுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய அதிகாரிகளை அனுப்ப ஸ்டாலின் அறிவுரை வழங்கினார். அந்தந்த மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளை அனுப்ப அறிவுறுத்தியுள்ளார். மருந்துகள் , ஆக்சிஜன் இருப்பு, படுக்கை வசதிகள் இருப்பதை கண்காணிக்க வேண்டும். மக்களுக்கு எவ்வித ததையுமின்றி மருத்துவ சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×