search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆக்சிஜன் தயாரிப்பதை கண்காணிக்க குழு: 2 வாரத்துக்கு ஒருமுறை அறிக்கை அளிக்க வேண்டும் - தமிழக அரசு

    ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளித்து அதற்கான அரசாணையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    அனைத்துக்கட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சுப்ரீம் கோர்ட்டிலும் தமிழக அரசு தகவல் தெரிவித்திருந்தது.

    இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளித்து அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழக அரசு

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கண்காணிப்பு குழு தலைவராகவும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, சப்-கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு வாரிய என்ஜினீயர் உள்பட 5 பேர் இதில் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த கண்காணிப்பு குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதை ஆய்வு செய்து அரசுக்கு 2 வாரத்துக்கு ஒருமுறை அறிக்கை தர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Next Story
    ×