search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடங்கியது

    ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 28 தங்கும் அறைகள் உள்ளன. இதில் தற்போது 50 சதவீத அறைகள் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, திருப்பூர் என 2 கோட்டங்கள் ஆகவும் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, உடுமலை, அமராவதி என 6 வனச்சரகங்கள் ஆகவும் பிரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இங்கு புலி, சிறுத்தை, காட்டு மாடுகள், யானை, பல்வேறு வகையான பறவைகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்டதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் சுற்றுலாப்பயணிகள் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இன்று (சனிக்கிழமை) முதல் கட்டுப்பாடுகள் தொடங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 28 தங்கும் அறைகள் உள்ளன. இதில் தற்போது 50 சதவீத அறைகள் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

    டாப்சிலிப் குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முககவசம் அணிவது, சமூக இடை வெளியை கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்பவர்கள் கூட்டமாகச் செல்லக்கூடாது சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

    டாப்சிலிப்பில்யானை சவாரி கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை தொடங்க வில்லை இனிமேலும் யானை சவாரி அரசின் உத்தரவு வரும்வரை சவாரி இருக்க வாய்ப்பில்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×