search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    அனைத்து துறையினரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பட்ஜெட்

    அனைத்து தொழில்களும் கொரோனாவால் நலிவடைந்து விட்டன. இதனால் இந்த பட்ஜெட் தொழில்துறையினர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு ஆண்டும் தொழில்துறையினர் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவும். புதிய சலுகைகள் மற்றும் புதிய அறிவிப்புகள் ஏதேனும் இருக்குமா? என்று பரவலான எதிர்பார்ப்பு காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக அனைத்து துறையிலும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் புதிய பட்ஜெட்டில் தங்களுக்கு எத்தகைய நிதி ஒதுக்கீடு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    குறிப்பாக அனைத்து தொழில்களும் கொரோனாவால் நலிவடைந்து விட்டன. இதனால் தொழில்துறையினர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

    சுதந்திர இந்தியாவில் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளில் இருந்து இந்த பட்ஜெட் வித்தியாசமாக இருக்கும். சலுகைகள் அதிகமாக வரும் என்று பிரதமரும், மத்திய நிதி மந்திரியும் ஏற்கனவே கூறியிருந்ததால் எதிர்பார்ப்பு அனைத்து பிரிவுகளிலும் பல மடங்கு எகிறி இருந்தது.

    Next Story
    ×