என் மலர்

  செய்திகள்

  கராத்தே தியாகராஜன்
  X
  கராத்தே தியாகராஜன்

  ஆதரவாளர்களுடன் கராத்தே தியாகராஜன் ஆலோசனை கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை அடையாறில் தனது ஆதரவாளர்களுடன் அரசியல் நிலைப்பாடு குறித்து கராத்தே தியாகராஜன் ஆலோசனை நடத்துகிறார்.

  சென்னை:

  சென்னை மாநகர முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜன். இவர் நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்தார். சென்னை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்தார்.

  இந்த நிலையில் கடந்த 2019-ல் தலைவர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பிறகு எந்த கட்சியிலும் சேராமல் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

  ரஜினிகாந்த் கட்சியில் அவர் சேருவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் ரஜினி கட்சி தொடங்க வில்லை. இந்த நிலையில் கராத்தே தியாகராஜன் தனது ஆதரவாளர்களை இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

  இந்த ஆலோசனை கூட்டம் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் அடுத்த கட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

  ஏதேனும் அரசியல் கட்சியில் சேரலாமா அல்லது புதிய அமைப்பு தொடங்கலாமா? சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட பல வி‌ஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதித்து இறுதி முடிவை அறிவிக்கிறார்.

  Next Story
  ×