search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போகி
    X
    போகி

    பழையன கழிதலும், புதியன புகுதலும்... போகிப் பண்டிகை கொண்டாட்டம்

    போகி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் இன்று பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர். இதனால் பல்வேறு இடங்களில் புகை மூட்டமாக காணப்பட்டது.
    சென்னை:

    நான்கு நாட்கள் உற்சாகமாக நடைபெறும் பொங்கல் பண்டிகையின் துவக்கம் தான் போகிப் பண்டிகை. அவ்வகையில், மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி இன்று அதிகாலையில் தீயிட்டு கொளுத்தினர். சிறுவர்கள் மேளம் அடித்து உற்சாகமாக போகியை கொண்டாடினர்.

    அதிகாலையில் பழைய பொருட்களை ஆங்காங்கே எரித்ததால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. பனி மூட்டத்துடன் இந்த புகையும் சேர்ந்ததால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. 

    காலையில் விடிந்து வெகுநேரமாகியும் எதிரே வாகனங்கள் செல்வது கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் மற்றும் புகை மூட்டம்  சூழ்ந்திருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, மிகவும் எச்சரிக்கையுடன் மெதுவாக பயணித்தனர்.

    போகி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், மாசு ஏற்படுத்தும் பொருட்களை எரிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர்.
    Next Story
    ×