search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜே.பி.நட்டா
    X
    ஜே.பி.நட்டா

    பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா 14-ந்தேதி பொங்கல் விழாவில் பங்கேற்பு

    சென்னை வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரவாயலில் நடைபெறும் நம்ம ஊர் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்.
    சென்னை:

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 14-ந்தேதி சென்னை வருகிறார். அன்று மாலை சென்னை மதுரவாயலில் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ள நம்ம ஊர் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்.

    விழாவில் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விழாவுக்கு வரும் நட்டாவை மாட்டு வண்டியில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழா முடிந்ததும் நட்டா கலைவாணர் அரங்கில் நடக்கும் துக்ளக் விழாவில் கலந்து கொள்வார் என்று மாநில தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×