search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை தியாகராயநகர் பஸ் நிலையத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடப்பதை காணலாம்
    X
    சென்னை தியாகராயநகர் பஸ் நிலையத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடப்பதை காணலாம்

    சென்னையில் 105 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் பெய்த அதிக மழை

    கடந்த 1915-ம் ஆண்டுக்கு பிறகு, ஜனவரி மாதத்தில் நேற்று அதிகளவு மழை பெய்து இருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று திடீரென்று மழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் கனமழையும் கொட்டியது.
    வடகிழக்கு பருவமழை காலம் நிறைவு பெற்று இருந்தாலும், பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. அந்தவகையில் ஜனவரி மாதம் 12-ந்தேதி வரை மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னையில் இதுவரை ஜனவரி மாதத்தில் பெய்த மழை அளவில் நேற்று பெய்த மழைதான் அதிகம் என்று கூறப்படுகிறது.

    மெரினா கடற்கரை மணற்பரப்பில் தேங்கி நிற்கும் மழை நீர்.

    கடந்த 1915-ம் ஆண்டுக்கு பிறகு, ஜனவரி மாதத்தில் நேற்று அதிகளவு மழை பெய்து இருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, 105 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் அதிக அளவு மழை பதிவாகி உள்ளது.
    Next Story
    ×