search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் விடுதியில் வைத்து கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்த டிரைவர் - பரபரப்பு தகவல்கள்

    திருப்பூரில் விடுதியில் வைத்து கள்ளக்காதலியின் கழுத்தை அறுத்த டிரைவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேஷ்(வயது27). இவர் திருமணமாகி தனது மனைவியை பிரிந்து சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    அப்போது அவரது ஊரை சேர்ந்த எழில்மதி(21) என்பவருடன் வெங்கடேசுக்கு பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக தொடங்கிய இவர்களது பழக்கம். நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பரஸ்பரம் தங்கள் செல்போன் எண்களை பகிர்ந்து மணிக்கணக்கில் பேசி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எழில்மதி, திருப்பூர் அடுத்த பூலுவப்பட்டி பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்தார். இருப்பினும் காதலர்கள் இருவரும் செல்போனில் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு போனில் பேசிய வெங்கடேஷ், காதலியிடம் உன்னை பார்க்க வேண்டும். நான் திருப்பூருக்கு வருகிறேன் என கூறியுள்ளார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.

    அதன்படி நேற்று முன்தினம் வெங்கடேஷ் சென்னையில் இருந்து திருப்பூருக்கு வந்தார். பின்னர் தனது காதலி தங்கி வேலை பார்க்கும் நிறுவனத்தின் அருகே உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

    பின்னர் தான் வந்த தகவலை காதலிக்கும் தெரியப்படுத்தினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த எழில்மதி மாலையில் தனது காதலனை பார்ப்பதற்காக அந்த விடுதிக்கு சென்றார்.

    அங்கு தனது காதலனை சந்தித்து வெகு நேரமாக பேசி கொண்டிருந்தார். பின்னர் அன்று முழுவதும் 2 பேரும் உல்லாசமாக இருந்துள்ளனர். நேற்று காலை வெங்கடேஷ் தனது காதலியை அழைத்து கொண்டு சாப்பிங் சென்றுள்ளார்.

    அப்போது வெங்கடேசுக்கு அடிக்கடி போன் வந்து கொண்டே இருந்தது.

    இதனால் சந்தேகம் அடைந்த எழில்மதி இதுகுறித்து காதலனிடம் கேட்டார். ஆனால் அதற்கு அவர் பதில் கூறவில்லை. இதையடுத்து வெங்கேடஷ் காதலியுடன் தான் தங்கியிருந்த அறைக்கு வந்தார். அங்கு அவர்களுக்குள் பிரச்சினை வெடித்தது.

    அப்போது, எழில்மதி, நீ என்னை மட்டும் தான் காதலிப்பதாக கூறினாய், ஆனால் உனக்கு அடிக்கடி போன்கள் வருகிறது. மேலும் வேறு சில பெண்களிடம் அடிக்கடி போனில் பேசுகிறாய். உன்னை நம்பி நான் ஏமாந்து விட்டேன் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், எழில்மதியின் கழுத்தை அறுத்தார். மேலும் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

    இந்த நிலையில் இவர்களது அறை வெகு நேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் அங்கு சென்று அறை கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

    அப்போது 2 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர்கள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×