search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின் - தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்
    X
    முக ஸ்டாலின் - தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்

    மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு- கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து அனுமதி அளிக்க கோரி கவர்னருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
    சென்னை:

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு இருக்கிறது. இதற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.

    மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று 5 அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இந்நிலையில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு விரைந்து அனுமதி அளிக்க கோரி கவர்னர் பன்வாரிலாலுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

    7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் மருத்துவ கலந்தாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×